ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க.. பிரதமர் வேட்பாளர் நாமல்!! ரணிலை விரும்பாத மகிந்த
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவதை மகிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவும், பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவும் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்துவதற்கு இன்னும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி செயலாளரை நீக்கிவிட்டு காமினி செனரத் ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் அவர் கூறுகிறார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பசில் ராஜபக்ஷ ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.