செய்தி வட அமெரிக்கா

கனடாவில் திடீரென மாறிய காலநிலை – கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள்

கனடாவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

கனடாவில் சட்டென்று மாறிய வானிலையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

அந்நாட்டின் டொராண்டோ பகுதியில் நேற்று மாலையில் இடி, மழையுடன் திடீரென பனி புயலும் தாக்கியது.

ஒருபுறம் சாரல் மழை பொழிய காற்றின் வேகத்தின் பனிக்கட்டிகளும் அடித்து வரப்பட்டதால் மக்கள் தவிப்புக்குள்ளாகினர். ஒரே நேரத்தில் இடி, மழை, பனிப்புயல் என மாறிய வானிலையை கண்ட மக்கள் திகைப்புக்குள்ளாகினர்.

வீதிகள் முழுவதும் பனி கொட்டிக் கிடந்ததால் வாகனங்களை இயக்க முடியவில்லை. திடீரென உருவான பனிப்புயலால் வழக்கத்தை விட அதிகளவு பனி கொட்டியதாக கூறப்படுகிறது.

குளிர்காலத்தில் இதுபோல் மாறுபட்ட வானிலை நிலவுவது இது இரண்டாவது முறை என தகவல் வெளியாகியுள்ளது. சாலையில் மழைதுளியுடன் கொட்டிய பனிகளால் சில்லென்ற வானிலை ஏற்பட்டது.

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!