போரில் வடகொரியாவின் பால்ஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்திய ரஷ்யா!
வடகொரியாவில் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கவனம் செலுத்தி, ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கு வசதியாக இருப்பவர்கள் மீது கூடுதல் தடைகளை விதிப்பதில் கவனம் செலுத்தும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் பேச்சாளர் ஜோன் கார்பி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவும் வடகொரியாவும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அமெரிக்கா முன்பு தெரிவித்திருந்தது.
900 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கக்கூடிய வடகொரியாவின் தானியங்கி ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துவதாக முதல்முறையாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்காவின் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
(Visited 4 times, 1 visits today)