சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் மாற்றம்!
சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்க்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த வாரம் பெரும் வீழ்ச்சி கண்டது.
இது நோய்த்தொற்று அதிகமாக இருப்பினும் தற்போதைய நோய் அலை குறைந்து வருவதைக் காட்டுவதாக கூறப்படுகிறது.
“கொவிட்-19 நோய்த்தொற்று அலை குறைந்து வருகிறது என்று நம்பிக்கை கொள்ளலாம்,” என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்று நோய்ப் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகரான பேராசிரியர் டேல் ஃபிஷர் கருத்துரைத்தார்.
டிசம்பர் 24லிருந்து 30ஆம் தேதிவரை 496 நோயாளிகள் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது அதற்கு முந்திய வார எண்ணிக்கையான 864ஐ எடுத்துக் கொண்டால் பெரும் வீழ்ச்சியாகும்.
(Visited 7 times, 1 visits today)