இலங்கையில் அரிசிக்கான வரி குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் இறக்குமதி அரிசிக்கு இதற்கு முன்னர் 65 ரூபாய் வரி அறிவிடப்பட்டது.
இது தொடர்பில், நிதியமைச்சு அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
குறித்த தீர்மானம் ஜனவரி 2ஆம் திகதி முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 16 times, 1 visits today)





