குடும்பங்கள் தற்கொலை நிலையில் உள்ளன!! சஜித் வெளிப்படுத்திய தகவல்
இலங்கையில் பிள்ளைகளுக்குச் சரியான முறையில் உணவளிக்க முடியாமல், வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க VAT வரியை அதிகரித்தாலும், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான ஒரே வழி நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டிற்கு கொண்டு செல்வதற்கான அமைப்பை தயாரிப்பதே ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
திருடர்களைப் பிடிப்பதற்குப் பதிலாக, திருடர்களைப் பாதுகாக்கிறார்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கம்பஹா புட்பிட்டிய மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சுஹுரு வகுப்பறை வழங்கும் வழங்கும் நிகழ்ச்சியின் போதே அவர் நேற்று (02) இவ்வாறு தெரிவித்தார்.
மனித இம்யூனோகுளோபின் போதைப்பொருள் ஊழல் விவகாரத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிராக சமகி ஜன பலவேக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த போது அதனை தோற்கடிக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் உழைத்ததாகவும் அவர்களும் இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற திருடர்கள் கூட்டமே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.