ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த வார்னர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை பேட்ஸ்மேனான டேவிட் வார்னரின் ஆட்டம் குறித்து சமீப காலமாக விமர்சனம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சிட்னியில் 3-ந்தேதி தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் அவரது கடைசி போட்டியாகும்.
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. தொடக்க வீரரான வார்னர் சிறப்பான பங்களிப்பை அணிக்கு வழங்கினார்.
இரண்டு முறை உலகக்கோப்பையை வாங்கிய அணியில் இடம பிடித்துள்ளார். 161 ஒருநாள் போட்டிகளில் 6932 ரன்கள் குவித்துள்ளார்.
சராசரி 45.30 ஆகும். ஸ்டிரைக் ரேட் 97.26. ஒரு நாள் போட்டியில் 179 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 22 சதங்கள், 33 அரைசதங்கள் அடித்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.