சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மருந்தகங்களை நாடும் நோயாளிகள்
சிங்கப்பூரில் COVID-19 தொற்று அதிகரித்துள்ளதால் பலர் மருந்தகங்களை நாடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
WhiteCoat போன்ற தொலைச் சுகாதாரச் சேவைகளையும் பலர் நாடுகின்றனர். நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாய் WhiteCoat மருந்தகத்தின் மூத்த மருத்துவ இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் முதல் அதிகரிக்கத் தொடங்கிய நோயாளிகள் எண்ணிக்கை, படிப்படியாக உச்சத்தைத் தொட்டிருப்பதாக அவர் கூறினார். Doctor Anywhere இணையச் சேவையும் நோயாளிகள் எண்ணிக்கை இரட்டித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதனால் அவசரமற்ற பொது மருத்துவச் சேவைகளை பின்னொரு தேதிக்கு ஒத்திவைத்திருப்பதாக மருந்தகம் குறிப்பிடப்படுகின்றது. Raffles Medical மருந்தகத்தின் 48 பொது மருந்தகங்களிலும் நோயாளிகள் எண்ணிக்கை, பொதுவாக டிசம்பரில் இருப்பதை விட 30 முதல் 50 சதவீதம் அதிகம் இருப்பதாகச் சொல்லப்பட்டது.
சிங்கப்பூரில் இயங்கும் சில பெரிய மருந்தகங்கள் கூடுதல் மருத்துவர்களைப் பணிக்கு அழைத்துள்ளன.
தற்போது பரவும் COVID-19 நோய் ஏற்கெனவே உச்சம் தொட்டிருக்கலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் சென்ற வெள்ளிக்கிழமை கூறினார்.