செங்கடலில் வர்த்தக கப்பல் மீது தாக்குதல்!! அமெரிக்கா கொடுத்த அதிரடி பதிலடி
செங்கடலில் வர்த்தக கப்பலில் ஏற முயன்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும், அமெரிக்க கடற்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அங்கு அமெரிக்க இராணுவத்தின் தாக்குதல்களால் கிளர்ச்சியாளர்களின் சிறிய படகுகள் அழிக்கப்பட்டதாக பிபிசி உலக சேவை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் ஏமனின் ஹூதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
நவம்பர் மாதம் முதல் செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது இந்தக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சண்டைக்குப் பதிலடியாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட டென்மார்க் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலே இன்று (31) இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இதுதொடர்பான தாக்குதலுக்குப் பிறகு செங்கடல் வழியாக பயணம் செய்வது 48 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.