சிங்கப்பூர் மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை
சிங்கப்பூர் மக்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வங்கி அனுப்புவது போன்ற குறுஞ்செய்திகள் அனுப்பி மக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாத்தில் மட்டும் 100க்கும் அதிகமானோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஏமாற்றப்பட்டு இழந்த பணம் 161,000 வெள்ளியபகும். “+65” எண்ணில் வங்கியிலிருந்து வருவது போன்ற குறுஞ்செய்தியைச் சொடுக்கியதால் அவர்கள் பணம் பறிபோனது.
குறுஞ்செய்தியைச் சொடுக்கியதும் அது வங்கியின் இணையப்பக்கம் போல் காட்சிதரும் போலி இணையப்பக்கத்துக்கு இட்டுச்செல்லும்.
அங்கு இணைய வங்கி விவரமும் OTP ஒருமுறை கடவுச் சொல்லும் கேட்கப்படும்.
இந்த மாதத்தில் மட்டும் 100க்கும் அதிகமானோர் அப்படி ஏமாந்துவிட்டதால் எச்சரிக்கையாக இருக்கும்படி பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
(Visited 4 times, 1 visits today)