கலிபோர்னியாவின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறுத்தப்படுகின்றன
கலிபோர்னியாவின் வென்ச்சுரா கடற்கரையில் புத்தாண்டுக்காக திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட பலத்த புயல் காரணமாக, கலிபோர்னியா கடற்கரையை இருபது அடி உயர அலை தாக்கியது.
20க்கும் மேற்பட்டோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த சில நாட்களில் 15 முதல் 20 அடி உயர அலைகள் எழும் அபாயம் உள்ளதால், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
புவி வெப்பமடைதல் மற்றும் பனிக்கட்டிகள் உருகுவதால் கலிபோர்னியாவில் கடல் மட்டம் பல ஆண்டுகளாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)