இலங்கை

இலங்கையில் VAT வரி அதிகரிப்பு: Dialog நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) 15% இலிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டதன் காரணமாக, அனைத்து மொபைல், மொபைல் பிராட்பேண்ட், கட்டண தொலைக்காட்சி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் ஆகியவற்றுக்கு பொருந்தும் வரிகள் அதற்கேற்ப, 01/1 /2024 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Dialog Axiata ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு Vat விகிதங்களின் அதிகரிப்பு காரணமாக விலைகள் எவ்வாறு மாறும் என்பது குறித்த குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”அரசாங்கம் அறிவித்ததன் படி பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக 01/01/2024 முதல் அமுலாகும் வகையில் தொலைத்தொடர்பு சேவைகள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். உள்ளூர் அழைப்புகள்/SMS, பெறுமதி சேர் சேவைகள்(VAS) மற்றும் PayTV சேவைகள் மீதான மொத்த வரி 42.02% ஆகும். டேட்டா, Wi-Fi சேவைகள் மற்றும் IDD அழைப்புகள் மீதான மொத்த வரி 23.50% ஆகும். எனினும் ஒரு சில முற்கொடுப்பனவு டேட்டா கார்ட்களில், டேட்டா Quota குறைக்கப்பட்டதுடன் வரி உள்ளடங்கிய விலையில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை. மேலதிக விபரங்களுக்கு https://dlg.lk/ta ஐ பார்வையிடுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!