இலங்கை – கேக் விற்பனை 25% ஆக குறைவு: பேக்கரி உரிமையாளர்கள்
பண்டிகைக் காலங்களில் கேக் தயாரிப்பதற்கு முட்டைகள் கிடைக்காததால் உள்ளூர் சந்தையில் கேக் விற்பனை 25% வரை குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.
வழமையான கேக் விற்பனையில் குறைந்தது 50 வீதத்தை தாங்கள் எதிர்பார்த்திருந்தாலும் அது 25 வீதமாகக் குறைந்துள்ளது என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
“கேக் தயாரிப்பதற்கு எங்களுக்கு சரியான நேரத்தில் முட்டைகள் கிடைக்கவில்லை. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்னும் யார்டுகளில் பாதுகாப்பாக உள்ளன, ஆனால் உள்ளூர் சந்தையில் முட்டைகள் எதுவும் விநியோகிக்கப்படவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.
அதனால், இந்த பண்டிகை காலத்தில் கேக் வியாபாரம் வெற்றிபெறவில்லை என்றார்.
(Visited 4 times, 1 visits today)