இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடிய தென்னாப்பிரிக்கா!
காசாவில் பாலஸ்தீனியக் குழுவான ஹமாஸுக்கு எதிரான அதன் ஒடுக்குமுறையில் 1948 இனப்படுகொலை மாநாட்டின் கீழ் இஸ்ரேல் தனது கடமைகளை மீறுவதாக அறிவிக்கும் அவசர உத்தரவை பிறப்பிக்குமாறு சர்வதேச நீதிமன்றத்திடம் தென்னாப்பிரிக்கா கோரியுள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் மேற்படி நடவடிக்கையை அடிப்படையற்ற வழக்கு என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் தனது இராணுவப் பிரச்சாரத்தை நிறுத்துவதற்கு தற்காலிக அல்லது குறுகிய கால நடவடிக்கைகளை எடுக்குமாறு தென்னாப்பிரிக்கா வலியுறுத்தியுள்ளதுடன், “பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளுக்கு மேலும் கடுமையான மற்றும் சீர்படுத்த முடியாத தீங்குகளிலிருந்து பாதுகாக்க இந்த வழக்கு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
விசாரணைக்கு திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு சில சந்தர்ப்பங்களில் புறக்கணிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.