கோட்டாபயவை விரட்டியடித்ததன் பின்னணியில் இயங்கிய பசில்!
பசில் ராஜபக்சவினால் கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார் என தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்காக அவர் முயற்சித்துள்ளார் என கூறப்படுகின்றது.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது திலித் ஜயவீர இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு பசில் ராஜபக்சவினால் கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார். இந்த சதியின் பின்னணியில் பசில் ராஜபக்சவே செயற்பட்டார்.
பசில் ராஜபக்சவின் ஆதிக்கம் காரணமாக கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் பயணம் நிறைவுக்கு வந்தது.இதன் விளைவாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து மீள தேசியவாதம் அத்தியாவசியமானது எனவும்,கோட்டாபய ராஜபக்ச தேசியவாதம் என்றால் என்ன என்பதை ஓரளவு அறிந்தவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பின்னணியில், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்சவின் கருத்துக்களுக்கமையவே கோட்டாபய ராஜபக்ச செயல்பட்டதாக திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மேலும், பசில் ராஜபக்சவின் ஆட்சிக் கவிழ்ப்பினால் ஏமாற்றமடைந்த மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் குழு அனுர திஸாநாயக்க தலைமையிலான குழுவில் இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.