பிரான்ஸில் வீடொன்றில் தீவிபத்து – சோதனையிட்டவர்கள் அதிர்ச்சி
 
																																		பிரான்ஸில் தீவிபத்து ஏற்பட்ட வீடொன்றில், பொதி ஒன்றுக்குள் சுற்றப்ப்ட்ட இறந்த குழந்தை ஒன்றை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 11 மணி அளவில் அங்குள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய வெடிப்பு சத்தத்துடன் தீ விப்த்து ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஒருபக்கம் அங்கு வசித்த பலரை வெளியேற்றிக்கொண்டே, தீயையும் அணைத்தனர்.
அதன் போது தீ பரவிய வீட்டுக்குள் பொதி ஒன்றில் வைத்து பூட்டப்பட்ட நிலையில் குழந்தை ஒன்றில் சடலத்தை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக பொலிஸார் அழைக்கப்பட்டனர். குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
 
        



 
                         
                            
