இலங்கை

டிபெண்டர் வாகனம் மோதியதில் மாணவிக்கு நேர்ந்த கதி

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியினை கடக்க முற்பட்ட மாணவி மீது டிபெண்டர் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றுளளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பரந்தன் வீதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற டிபெண்டர் வாகனம் வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது மோதியதில் மாணவியொருவர் படுகாயமடைந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி வள்ளிபுனம் பகுதியை சேர்ந்தவர் இவர் காலில் உடைவு ஏற்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தினை ஏற்படுத்திய களுத்துறையை சேர்ந்த 54 வயதுடைய வாகனத்தின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தில் வந்தவர்கள் இ.போ.ச பேருந்தினை மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தர்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!