யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட பரபரப்பு
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக பேசப்பட்டபோது யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே தர்க்கம் ஏற்பட்டது.இதன்போது ஒரு கட்டத்தில் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து உரையாற்றிக் கொண்டிருந்த நபர் தீடீரென கூட்டத்திற்கு நடுவே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வந்ததால் நிலைமை கட்டுக்குள் வந்தது.
அமைச்சர் கட்சி ஆதரவாளர்களை அழைத்து கட்சி கூட்டத்தை நடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.ஆனபோதும் அமைச்சர் குறித்த நபர் பொது அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன்,செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.