இலங்கை

கொழும்பில் விடுதிக்கு சென்ற நபருக்கு நேர்ந்த கதி – தப்பியோடிய பெண்

பெண் ஒருவருடன் விடுதி ஒன்றிற்கு வந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பொரளஸ்கமுவிலிருந்து பதிவாகியுள்ளது.

சம்பவத்தின் பின்னர் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரலஸ்கமுவ தெஹிவளை வீதியில் உள்ள சௌபாகார மாவத்தையில் உள்ள விடுதிக்கு பெண் ஒருவருடன் வந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

பொரலஸ்கமுவ வெரஹெர போதிராஜ புர பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் நேற்று பிற்பகல் குறித்த பெண்ணுடன் குறித்த விடுதிக்கு வந்துள்ளார், சில மணித்தியாலங்களின் பின்னர் குறித்த பெண் அறையிலிருந்து அலறியடித்தவாறு வெளியே வந்துள்ளார்.

பின்னர், அந்த நபர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக விடுதி மேலாளரிடம் தெரிவித்தார்.

மேலாளர் அறைக்குச் சென்று பார்த்தபோது வாயில் சளி வெளியேறியதைக் கண்ட அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து முச்சக்கரவண்டியைக் கொண்டு வந்து அந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தார்.

அப்போது அவள் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

தப்பியோடிய பெண்ணை கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை களுபோவில வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!