மானிப்பாயில் போயா தினத்தில் பொலிஸாருக்கு மதுபானம் விற்பனை செய்த நபர் கைது
போயா தினத்தில் பொலிஸாருக்கு பியர் விற்பனை செய்த ஒருவர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றது.
மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திலேயே இன்று(26) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மாறுவேடத்தில் சென்ற பொலிஸாருக்கு பியர் விற்பனை செய்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 36 வயதான சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
(Visited 11 times, 1 visits today)





