காசாவில் எப்பொழுது அமைதி திரும்பும் : நிபந்தனை விதித்த இஸ்ரேல்!
ஹமாஸ் அழிக்கப்பட்டு, அந்த பிரதேசம் இராணுவமயமாக்களுக்கு உட்படுத்தப்பட்டால் மட்டுமே காஸாவில் அமைதியை அடைய முடியும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரி்க்கை விடுத்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு காசாவில் உள்ள அகதிகள் முகாமில் கிறிஸ்துமஸ் ஈவ் பண்டிகையன்று இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் கணக்கு விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள நெதன்யாகு, “ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும், காசா இராணுவமயமாக்கப்பட வேண்டும், பாலஸ்தீன சமூகம் சீரழிக்கப்பட வேண்டும். இஸ்ரேலுக்கும் அதன் காஸாவில் உள்ள பாலஸ்தீனிய அண்டை நாடுகளுக்கும் இடையேயான அமைதிக்கான மூன்று முன்நிபந்தனைகள் இவை” என்று கூறினார்.
இராணுவமயமாக்கலுக்கு பிரதேசத்தின் “சுற்றளவில் ஒரு தற்காலிக பாதுகாப்பு வலயத்தை நிறுவ வேண்டும்” என்றார்.