டெஸ்லா கார்களால் ஆபத்து – 1,20,000 கார்களைத் திரும்பப் பெற்ற நிறுவனம்
அமெரிக்காவில் டெஸ்லா கார்களால் சாரதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் கார்களைத் திரும்பப் பெற டெஸ்லா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாடல் எஸ். மாடல் எக்ஸ் ஆகிய வகை கார்களில் விபத்து நேரிட்ட போது கதவு திறக்க முடியாமல் போனதால் பாதுகாப்பு பிரச்சினை எழுந்தது.
அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தவில்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து குறிப்பிட்ட வகை கார்களைத் திரும்பப் பெறுகிறது டெஸ்லா நிறுவனம்.
கடந்த வாரத்தில் அமெரிக்க சாலைகளில் ஓடிய சுமார் 20 லட்சம் கார்களையும் நிறுத்தி வைத்த டெஸ்லா பாதுகாப்பு சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டது.
(Visited 6 times, 1 visits today)