இலங்கையில் மீளவும் பரவும் கொரோனா வைரஸ் : ஒருவர் உயிரிழப்பு!
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலும் சோதனைகள் மேற்கொள்ளப்படாமையினால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெளிவருவதில்லை.
இந்நிலையில் கொவிட் தொற்று காரணமாக கம்பளை உலப்பனையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (24.12) உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சிசோசிஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொவிட் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவில் பரவும் புதிய வகை கொவிட் வைரஸ் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, தடுப்பூசி மூலம் பாதுகாப்பு உடலிலேயே உள்ளது.
அறிகுறிகள் தென்பட்டால் சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.