சீனா நிலநடுக்கம் : 148ஆக அதிகரித்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை
சீனாவின் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று (23) தெரிவித்துள்ளனர்.
அந்த நாட்டின் கான்சு மாகாணம், ஜிஷிஷன் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது.
கான்சு மாகாணத்தில் 117 போ் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 617 போ் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)





