தைவான் ஜலசந்தியில் மீளவும் அதிகரிக்கும் பதற்றம்!
கடந்த 24 மணி நேரத்தில், எட்டு சீன போர் விமானங்கள் தைவான் ஜலசந்தியின் இடைநிலைக் கோட்டைக் கடப்பதைக் கண்டறிந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனா, தைவானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக உரிமைக்கோரி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக சீனா- தைவான் மோதல் அதிகரித்து வருகிறது.
தைவானில் வரும் 2024 ஜனவரி 13ஆம் திகதி அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், சீனா தனது பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
தைவானின் பாதுகாப்பு அமைச்சகம், சீன ஜே-10, ஜே-11 மற்றும் ஜே-16 போர் விமானங்கள் ஜலசந்தியின் வடக்கு மற்றும் மையப் புள்ளிகளில் இடைநிலைக் கோட்டைக் கடந்ததாகக் கூறியது.
இதற்கிடையே ஜலசந்தியில் மற்றொரு சீன பலூனையும் அமைச்சகம் கண்டறிந்ததாக கூறியுள்ளது. இது ஆண்டின் இந்த நேரத்தில் நிலவும் காற்றினால் இயக்கப்படும் வானிலையை கண்காணிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தைவான் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.