செய்தி

இலங்கையில் 2 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

திருகோணமலை-நாமல்வத்தை வயல் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று (23) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை கடற்படையில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிண்ணியா -குறிஞ்சாங்கேணி பகுதியைச் சேர்ந்த ரபீக் முகமது முஸம்மில் (34வயது) எனவும் தெரியவருகிறது.

கிண்ணியாவில் இருந்து நாமல்வத்தை பகுதியில் உள்ள வயலுக்கு வருகை தந்ததாகவும் பின்னர் மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக தாகத்தியை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் மாலை நேரமாகியும் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்துக்கு வராததால் வயல் பகுதிக்கு தேடி சென்றதாகவும் இதே வேளை வயலுக்குள் வரம்பில் சருக்கு விழுந்து கிடந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி