முல்லைத்தீவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 170 பேருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட 170 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் பெரண்டினா நிறுவனத்தின் மனிதாபிமான உதவி செயல் திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டது
அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில் 63 குடும்பங்களுக்கும் புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 06 குடும்பங்களுக்கும் கூழாமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் 61 குடும்பங்களுக்கும் கருவேலகண்டல் கிராம அலுவலர் பிரிவில் 04 குடும்பங்களுக்கும் முத்துவிநாயகபுரம் கிராம அலுவலர் பிரிவில் 16 குடும்பங்களுக்கும் பேராறு கிராம அலுவலர் பிரிவில் 20 குடும்பங்களுக்குமாக 170 குடும்பங்களுக்கு இந்த உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
குடும்பத்திற்கு தலா 4505 பெறுதியான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய ரூபா 765,850 பெறுமதியான பொருட்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன
இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் க.ரவீந்திரன் பெரண்டினா நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர்B.M. றகீம் முல்லைத்தீவு மாவட்ட பெரண்டினா நிறுவனத்தின் பணியாளர்கள் கூழாமுறிப்பு கருவேலன்கண்டல் புளியங்குளம் பண்டாரவன்னி முத்துவிநாயகபுரம் பேராறு ஆகிய கிராமங்களின் கிராம அலுவலர்கள் கலந்துகொண்டு உலர்உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்