ஐரோப்பா செய்தி

ஜெர்மனி பொலிஸார் தொடர்பில் வெளிவரும் முக்கிய தகவல் – அதிருப்தியில் மக்கள்

ஜெர்மனி நாட்டின் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜெர்மனிய பொலிஸாரின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து தற்பொழுது அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரம் ஜெர்மன் பொலிஸார் வீடு வாசல்கள் அற்றவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது பாரபட்சமான முறையில் நடந்து  கொள்கின்றார்கள் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் பலர் அசௌகரிகத்தை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்திருக்கின்றது.

மேலும் பொது மக்களை பாதுகாக்கும் பொலிஸாரின் இந்த நடவடிகையானது  பலர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளையில் ஜெர்மன் பொலிஸாருக்கு வேலைப்பழு உள்ளதாகவும்  25 வீதமான பொலிஸார்கள் ஒரு தடவையாவது தனது மேலதிகாரியுடைய கட்டளைக்கு இசைந்து நடவடிக்கைகளில் ஈடுப்படவில்லை என்றும் தெரியவந்திருக்கின்றது.

இந்த அறிக்கை சம்பந்தமாக ஜெர்மனியின் உள்ளுர் ஆட்சி அமைச்சர் நான்ஸி பாஸ்ட் அவர்கள் கருத்து வெளியிடுகையில் ஜெர்மன் நாட்டில் இன வாதத்திற்கு எவ்விதமான இடத்தையும் தான் அளிக்க மாட்டேன்.

மேலும் இந்த அறிக்கையின் தொடர்பில் தான் கூடிய கவனத்தை மேற்கொண்டு இது தொடர்பில் புதிய சில திருத்தங்களை மாற்றங்களில் கொண்டு வருவதற்கு தான் முயற்சி செய்யப்போவதாகவும் கூறி இருக்கின்றார்.

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி