வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கு காணி உரிமை வழங்குதல், மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சட்டங்களை அமுல்படுத்துதல், இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமான பல விடயங்களும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. .
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், எஸ்.இராசமாணிக்கம், ஜி.கருணாகரன், .டி. கலை அரசன், குலசிங்கம் திலீபன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.