இலங்கையில் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை!
இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் புதிய அடையாள அட்டைகளை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து படிப்படியாக அனைத்து மக்களுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அடையாள அட்டைக்கான டிஜிட்டல் புகைப்படத்தை பெறுவதற்கான கட்டணம் 400 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியின் மூலம் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 150 ரூபா முதல் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 20 times, 1 visits today)





