டேட்டிங் செயலியில் சந்தித்த இளம் பெண்ணால் 17 லட்சம் டொலரை பறிகொடுத்த 55 வயது முதியவர்!
டிண்டர் எனும் டேட்டிங் செயலில் இளம்பெண்ணை காதலித்த நிதி ஆலோசகர் 17 லட்சம் டொலரை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங்கில் வாழும் இத்தாலியை சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர் டேட்டிங் செயலியான டிண்டரில் சுமார் 17 லட்சம் டொலரை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.டிண்டரில் அறிமுகமான பெண்ணிடம் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் பேசியுள்ளார். பின்னர் வாட்ஸ்சாப்பில் இருவரும் உரையாடலை ஆரம்பித்துள்ளனர்.
அந்த பெண்ணிடம் ஆலோசனையை கேட்டு மார்ச் 6ம் திகதியில் இருந்து மார்ச் 23ம் திகதி வரை பல்வேறு வலைத்தளங்களில் நிதி ஆலோசகர் முதலீடு செய்து இருக்கிறார்.இவற்றில் பணம் போட்டால் கண்டிப்பாக லாபம் கிடைக்கும் என்பது போல அந்த பெண் முதியவரிடம் பொய் கூறியுள்ளார். அதனை நம்பி அவரும் பணத்தைப் போட்டுள்ளார்.
முதியவர் பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்து 22 தனித்தனி பரிவர்த்தனைகளில் நிதி ஆலோசகர் 17 லட்சம் டொலர் வரை முதலீடு செய்துள்ளார்.இவரின் முதலீடுகளுக்கு நிச்சயம் லாபம் கிடைக்கும் என அந்த பெண் வலியுறுத்தியுள்ளார்.அவர் கூறியபடி தனக்கு லாபம் கிடைக்காததை அடுத்து சந்தேகம் அடைந்த நிதி ஆலோசகர், காவல் துறை உதவியை நாடியுள்ளார். காவல் துறையினர் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை அந்த நபர் அறிந்து கொண்டுள்ளார்.
பொலிஸார் முதலீட்டாளர்களை ஏமாற்ற பல்வேறு போலி வலைத்தளங்கள் அதிக லாபம் கொடுப்பதாக கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதை தெரிவித்துள்ளனர்.மேலும் பொதுமக்கள் போலி வலைத்தளங்களை நம்பி எவ்வித முதலீடுகளையும் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.