இலங்கையில் செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மையத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை!
செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மையத்தை ஸ்தாபிப்பதற்கு 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்திற்கு தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் டிஜிட்டல் உருமாற்ற முகவர் நிறுவனமொன்றை நிறுவுவதற்கும் அதன் ஒரு அங்கமாக செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மத்திய நிலையத்தை நிறுவுவதற்கும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
இந்த நிறுவனங்களை நிறுவுவதன் நோக்கம், மூலோபாய மற்றும் கொள்கைத் தலைமையை வழங்குதல், அரசாங்கத்தின் டிஜிட்டல் மாற்றம் செயல்முறைக்கு வழிகாட்டுவதற்கு ஆலோசனை மற்றும் முதலீட்டைக் கண்காணிப்பதாகும்.
இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் மிகவும் திறம்பட செயற்படுவதற்கும் அதன் பெறுபேறுகளை அடைவதற்கும் பரந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு நிறுவனத்தை உருவாக்கும் நோக்கத்தை மனதில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.