யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் விவசாயிகள் பாதிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று(18) ஏற்பாடு செய்யப்பட்டது.
உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட 16 மில்லியன் ரூபா பெறுமதியான 21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்கு பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த விதை உருளைக்கிழங்கு குப்பிளான் பகுதியில் உள்ள களஞ்சியத்தில் இறக்கப்பட்ட நிலையில் குறித்த கிழங்குகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு வழங்குவதற்காக எடுத்துவரப்பட்ட உருளைக்கிழங்கின் பெரும்பாலானவை அழகிய நிலையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து எடுத்து வரும்போதே விதைகள் பழுதடையும் தன்மை இருப்பது அவதானிக்கப்பட்டதாகவும் இதனால் விவசாயிகள் குறித்த விதை உருளைக்கிழங்கை நடுகை செய்வதற்கு மறுத்துள்ளதாக தெரியவருகிறது.