மத்திய கிழக்கு

காசாவில் மிகப் பெரிய சுரங்க பாதையை கண்டுப்பிடித்த இஸ்ரேல்!

போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தங்களை மீறி காஸாவில் தனது தாக்குதலை மேற்கொண்டதால், ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையை கண்டுபிடித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் Erez எல்லைக் கடவைக்கு அருகில் ஹமாஸின் மிகப்பெரிய சுரங்கப்பாதையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை சிறிய வாகனங்கள் பயன்படுத்தும் அளவுக்கு பெரியதாக இருந்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த சுரங்கப்பாதையானது பல ஆண்டுகளுக்கு முன்பு பல மில்லியன் டொலர் செலவில் ஹமாஸ் அமைப்பினர் கட்டியிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதில் தண்டவாளங்கள், மின்சாரம், வடிகால் மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்பு ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்,  அதன் நுழைவாயில் Erez Crossing இலிருந்து 400 மீட்டர் (1,310 அடி) தொலைவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை அமைப்பு ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் சகோதரரும் ஹமாஸின் கான் யூனிஸ் பட்டாலியனின் தளபதியுமான முகமது சின்வார் தலைமையிலான ஒரு திட்டமாக இருக்கலாம் என இஸ்ரேல் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!