பிரான்ஸில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் அகதி ஒருவருக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் Nord மாவட்டத்தின் கடலில் இடம்பெற்றுள்ளது.
66 அகதிகளை ஏற்றிக்கொண்டு பிரித்தானியா நோக்கி பயணித்த படகு ஒன்று திடீரென மூழ்க ஆரம்பித்துள்ளது.
உடனடியாக அங்கிருந்து கடற்பிராந்தியத்தை கண்காணிக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நள்ளிரவு அளவில் அகதிகள் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். Grand Fort Philippe துறைமுகத்தில் இருந்து எட்டு கிலோமீற்றர் தொலைவில் கடலில் மூழ்கத்தொடங்கிய அனைவரையும் கடற்படையினர் மீட்டனர்.
ஆனால் துரதிஷ்ட்டமாக அகதி ஒருவர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியிருந்தார்.
இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. அகதி பலியானதாக அறிவிக்கப்பட்டார்.