இலங்கையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி!
மொரகஹகந்த நீர் திட்டத்தின் மற்றுமொரு கட்டமான வடமத்திய மாகாண பெரிய கால்வாய்த் திட்டத்தின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றியதை அடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பலத்த காயமடைந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் இருவர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் மற்றையவர் ஹபரணை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)





