சுவீடனில் பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் ஐவர் கைது!
சுவீடனில் கடந்த ஜனவரி மாதம் புனித குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்ட 5 சந்தேக நபர்களை தான் கைது செய்துள்ளதாக சுவீடன் இன்று தெரிவித்துள்ளது.
சுவீடனிலுள்ள துருக்கிய தூதரகத்துக்கு முன்னால்இ கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போதுஇ ஆர்ப்பாட்டக்காரர்களால் புனித குர் ஆன் எரிக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி சம்பவத்தின் பின்னர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்ட 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக சுவீடனின் ரகசிய சேவைப் பிரிவினர் இன்று தெரிவி;த்துள்ளனர்.
இவர்கள் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என சுவீடனின் ரகசிய சேவைப் பிரிவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் பிரதித் தலைவர் சுசானா ட்ரேஹோர்னிங் கூறியுள்ளார்.
குர்ஆன் எரிப்பு தொடர்பில் நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கும் பல வழக்குகளில் ஒன்று இது எனவும் அவர் கூறியுள்ளார்.