தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் புட்டின்!

விளாடிமிர் புடின் ஒரு பரந்த ஆதரவுத் தளத்துடன் ஒரு சுயேட்சை வேட்பாளராக மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவார், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ அதிகாரத்தில் இருக்கும் புடின், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் மேலும் ஆறு வருட பதவிக் காலத்தை பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
ஆளும் யுனைடெட் ரஷ்யா (யுஆர்) கட்சியின் முழு ஆதரவு இருந்தாலும் அவர் வேட்பாளராக போட்டியிட மாட்டார், ஆனால் சுயேச்சை வேட்பாளராக, அவர் தேர்தலில் களம் காணுவார் என யுஆர் கட்சியின் மூத்த அதிகாரியான ஆண்ட்ரே துர்ச்சக் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 7 times, 1 visits today)