டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கு மாறும் இலங்கை!
புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அட்டையில் கைவிரல் அடையாளம், குருதி வகை உள்ளிட்ட பல்வேறு தரவுகள் உள்ளடக்கப்பட்டிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு 76 சுய விபரங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது 6 முக்கிய விடயங்கள் மட்டுமே கோரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி பெயர், முகவரி, பிறந்த திகதி, பால் நிலை, தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பனவே கோரப்படும் என்று கூறப்படுகிறது.
புதிய விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரம் புதிய டிஜிட்டல் அட்டை வழங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் இதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.