போருக்கு மத்தியில் காஸா மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திய மழை
காஸாவில் போருக்கு மத்தியில் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை கடும்மழையால் மோசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடும்மழையும் புயல்காற்றும் சில இடங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தின. ஜபாலியா (Jabalia) அகதிகள் முகாம் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியதாக அங்கு வசிப்போர் கூறினர்.
ராஃபாவிலும் (Rafah) மழையால் பல பிரச்சினைகள் நிலவுகின்றன. காஸாவில் இஸ்ரேல் அதன் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதில் பலர் ராஃபாவில் அடைக்கலம் தேடினர்.
அங்குள்ள முகாம்கள் கடும்புயலில் சேதமடைந்தன. மழையால் நிவாரண முகாம்களில் தொற்றுநோய் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
காஸாவில் இதுவரை சுமார் 2 மில்லியன் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். அங்குள்ள மக்கள் தொகையில் அது கிட்டதட்ட 90 விழுக்காடு.
(Visited 4 times, 1 visits today)