தமிழ்நாடு

பேருந்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துநர்; 70 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் !

ஈரோடு அருகே நம்பியூரில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பேருந்து நடத்துநருக்கு 70 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் பகுதியில் இருந்து கோபிசெட்டிபாளையத்திற்கு அரசுப்பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் சரவணன் (49) என்பவர் நடத்துநராக பணியில் இருந்தார். அப்போது பள்ளி மாணவிகள் பேருந்தில் ஏறியுள்ளனர். மாணவிகள் 10 பேரிடம் நடத்துநர் சரவணன் அத்துமீறி நடந்து கொண்டதோடு, பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது மாணவிகள் நேரில் ஆஜராகி, சாட்சியம் அளித்தனர். இதையடுத்து இன்று இந்த வழக்கில் நீதிபதி மாலா தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி அரசுப்பேருந்து நடத்துநர் சரவணன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், தலா 7 ஆண்டுகள் என 70 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!