INDvsSA T20 – முதலில் பந்துவீசும் தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
உடல்நிலை சரியில்லாததால் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் ஆடவில்லை.
(Visited 12 times, 1 visits today)





