பிரேசில் முதல் பெண்மணியின் X வலைத்தள கணக்கு ஹேக் செய்யப்பட்டது!

பிரேசிலின் முதல் பெண்மணி ரொசங்கலா “ஜான்ஜா” சில்வாவின் X தளக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து உள்ளுர் அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கணக்கில் முதல் பெண்மணி மற்றும் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் பெண் விரோத அவதூறுகள் உட்பட பல செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (12.12) காலை அந்த பதிவுகள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)