இஸ்ரேல் -ஹமாஸ் போர் : பாரிஸில் ஒன்றுக்கூடிய 20இற்கும் மேற்பட்ட நாடுகள்!
இஸ்ரேல் உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்ட நாடுகள் பாரிஸில் ஒன்றுக்கூடி ஹமாஸின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் அரபு நாடுகள் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அக்டோபர் 07 ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த தொடங்கிய பிறகு, பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவிற்கு எதிராக ஒரு குறிப்பிட்ட பொருளாதாரத் தடைகளை கொண்டுவர ஜேர்மனி மற்றும் இத்தாலியுடன் இணைந்து பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
பிரெஞ்சு இராஜதந்திரிகள் முடிந்தவரை பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு பரந்த மூலோபாயத்தை விரும்புவதாகக் கூறியுள்ளனர். இந்த சூழ்நிலையிலேயே மேற்படி 20இற்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றுக்கூடியுள்ளன.
(Visited 6 times, 1 visits today)