உக்ரைனுக்கு புதிய உதவி தொகுப்பை அறிவித்த IMF!
உக்ரைனுக்கு 900 மில்லியன் டொலர் வழங்க IMF ஒப்புதல் அளித்துள்ளது.
மேற்கத்திய நட்பு நாடுகளிடமிருந்து கியேவிற்கு எதிர்கால நிதி மற்றும் இராணுவ ஆதரவு பற்றிய கவலைகளுக்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
IMF நிர்வாக இயக்குனர் Kristalina Georgieva வாஷிங்டனில் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy உடன் இணைந்து இந்த உதவி தொகுப்பை அறிவித்துள்ளார்.
உக்ரைன் நிதி மற்றும் இராணுவ உதவியை நம்பியுள்ளது, ஆனால் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூடுதல் நிதியளிப்பில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
கெய்வின் எதிர்த்தாக்குதல் இதுவரை மாஸ்கோவின் படைகளுக்கு எதிராக ஒரு தீர்க்கமான திருப்புமுனையை வழங்கத் தவறிவிட்டதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. போதிய நிதி இல்லையென்றால் போரில் ரஷ்யா வெற்றிப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.