இலங்கையில் 2 நாட்களில் 12 பேர் மாயம் – தேடுதல் வேட்டையில் பொலிஸார்
கடந்த இரண்டு நாட்களில் நாட்டின் பகுதிகளில் இருந்து நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பொரலஸ்கமுவ வெரஹெர பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது மாணவன், நாதகுடியிருப்பு தர்மபுரம் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவன், ஹட்டன் பொல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் யட்டயன வளர்ச்சி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 15 வயது சிறுமியும் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
குறித்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர் இந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் தப்பிச் சென்றுள்ளதாக பிரதான கண்காணிப்பாளர் கட்டுநாயக்க பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போனவர்களில் நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதியும், பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரும், எடரமுல்லைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும் அடங்குவர்.
மேலும், நோர்வூட்டில் வசிக்கும் 82 வயதான பெண், மொரட்டுவையில் வசிக்கும் 75 வயதுடைய ஆண், பள்ளம பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதான கூலித்தொழிலாளி மற்றும் கஹதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஆணும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.