இலங்கை தபால் நிலையங்களில் குவிந்து கிடக்கும் 7 லட்சம் கடிதங்கள்
இலங்கையில் தபால் தொழிற்சங்கங்கள் நேற்றுமுன்தினம் பிற்பகல் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்று மாலை 04.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.
வரலாற்றுப் பெறுமதியான நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலைய கட்டடங்களை தனியாருக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
அவர்களின் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்களில் சுமார் 07 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய தபால் பரிமாற்றத்தில் மட்டும் 04 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன.
(Visited 5 times, 1 visits today)