அரசு ஊழியர்கள் மீது நாடு முழுவதும் இலஞ்சப் புகார்கள்

இந்த வருடம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 3000க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை 3,255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றுள் கணிசமான எண்ணிக்கையானது அரச ஊழியர் கட்டமைப்பின் செயற்பாடுகளின் அடிப்படையில் பெறப்பட்ட முறைப்பாடுகளாகும்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 100 முறைப்பாடுகளும், அதிபர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 50 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 11 times, 1 visits today)