சுவிஸில் துப்பாக்கிச்சூடு : இருவர் உயிரிழப்பு!
சுவிட்சர்லாந்தின் சியோன் நகரில் இன்று (11.12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 35,000 பேர் வசிக்கும் நகரமான சியோனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத சந்தேக நபர் பல துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை Valais கன்டோனில் உள்ள பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 19 times, 1 visits today)





