இலங்கை அரச ஊழியர்களுக்கான செய்தி!

அரச அதிகாரிகளுக்கு அடுத்த வருடத்திற்கான விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 4,000 ரூபா முன்பணமாக வழங்கப்பட உள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அட்வான்ஸ் தொகை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் திகதி முதல் பிப்ரவரி 29ம் திகதிவரை வழங்கப்பட உள்ளது.
திறைசேரியின் உடன்படிக்கையின் பேரில், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் இது குறித்து அறிவித்துள்ளார்.
இந்த முன்பணத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் வசூலிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(Visited 30 times, 1 visits today)